75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு உபகுழு நியமனம்

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான உப குழுவில் எட்டு அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
