IOC பாடத்தை மறந்து எரிபொருள் நிறுவனத்தின் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனத்திற்கு!
Posted on 06.27.2022 by Farook in Local News with 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிபொருள் விநியோகத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 6 மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு தமது தாய் நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற்று எரிபொருளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணி சுமை ஏற்படக்கூடாது என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்த நிறுவனங்களுக்கு தலா 200 வீதம் வழங்கினால் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Please enable JavaScript to view the comments powered by Disqus.