Home » கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Source

‘கச்சத்தீவு விவகாரத்தில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கச்சத் தீவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், கச்சத் தீவை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், ”பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீள்கிறது. அவர்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என வாதிட்டார்.

அப்போது மத்திய அரசு தரப்பில், ‘சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன்பிடிக்கும் மீனவர்களை மட்டுமே இலங்கை கடற்படை கைது செய்கிறது. இந்திய கடல் எல்லைக்குள் கைது சம்பவங்கள் நிகழ்வதில்லை. இது இரு நாடுகளுக்கு இடையிலான வெளியுறவு கொள்கை விவகாரம் என்பதால், நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது’ என, விளக்கம் அளிக்கப்பட்டது.

இதே போல், தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க., தரப்பிலும் கச்சத் தீவில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமை குறித்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

கச்சத் தீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான துாதரக உறவு ரீதியிலானது என்பது ஏற்கக் கூடியதே. அதே சமயம், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைத்தது.

The post கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both