Home » ஐநா வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாது – இலங்கை அறிவிப்பு

ஐநா வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாது – இலங்கை அறிவிப்பு

Source

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக நாட்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய பொறிமுறைகளுக்கு பேரவை ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கை தொடர்பான விவகாரங்களில் வெளிப்புறப் பொறிமுறைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, நாட்டின் சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்புகளுக்குள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதே பொருத்தமான அணுகுமுறை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐநா வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாது – இலங்கை அறிவிப்பு

அத்துடன், இலங்கையின் தனித்துவமான சூழ்நிலைகள் மற்றும் நாட்டின் நிறுவன கட்டமைப்புகளை கருத்திற்கொண்டு, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான தேசிய முயற்சிகளுக்கு சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் பேரவையும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினை எட்டுவதற்கு தேசிய உரிமையுடனான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும், அனைத்து சமூகங்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐநா வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாது – இலங்கை அறிவிப்பு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both