Home » நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்

Source

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (24)  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளைய (25) தினத்துக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26ஆம் திகதி காலைக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் தீவிர சூறாவளியாகவும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் அமைப்பு இலங்கையை நேரடியாகத் தாக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் காரணமாக உருவாகும் காற்று இலங்கையின் குறுக்கே நீடிப்பதால், எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, வட மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both