அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றை மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
The post அநுராதபுரம் – மதவாச்சி வீதி பஸ் விபத்தில் இதுவரை 5 பேர் பலி appeared first on LNW Tamil.