அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கக் கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸ – கயந்த
அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கக்கூடிய தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச என்று பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன, மத, வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை புதிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும்.
கட்சி பேதமின்றி அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் இருப்பதாக எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, காலியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உரையாற்றும் போது, இருண்ட காலத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசியத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்துடன், இம்முறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
அச்சம் கொண்ட தலைவர்கள் நாட்டுக்கு தேவையில்லை. நாட்டின் ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனை ஜனாதிபதி தனது நடவடிக்கை மூலம் நிரூபித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி நாட்டை ஜனாதிபதித் தேர்தலை நடத்தக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.