அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 67 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்க்குதலில் காயமடைந்த அணைவரும் சீனாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் ஆவர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் தாம் சந்தித்ததாக கலிபோர்னியா மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.