அரசாங்கம் என்றால் என்ன என்பது மக்களுக்கு எடுத்துக் காட்டப்படும் – அனுரகுமார
அரசாங்கம் என்றால் என்ன என்பதை முதன்முறையாக மக்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழலும், மோசடியும் நிறைந்த அரசையே இதுவரை மக்கள் பார்த்து வந்தனர்
தற்போது, நாட்டு மக்கள் உணவு கூட பெற முடியாத அளவுக்கு சிரமத்தில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
மக்களே அரசாங்கங்களை உருவாக்கி ஆட்சியாளர் செல்வந்தராகவும் மக்கள் ஏழைகளாகவும் மாறுவதுதான் இதுவரை நாட்டில் நடந்துள்ளது. நடைபெறள்ள தேர்தலில் இது மாற்றியமைக்கப்படும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. பொதுமக்களின் பணத்தை கோடி கோடியாக செலவு செய்யும் அரசுகள் பயனற்றவை.
விவசாயம், முறையான மற்றும் போதுமான நீர்ப்பாசன முறையை உருவாக்குதல், ஆரோக்கியமான மக்களை உருவாக்குதல் ஆகியவை தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும். தேசிய மக்கள் சக்தியின் இலக்கான மக்கள் அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கேட்டுள்ளார்.