அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 57 ஆயிரத்து 500 ரூபா வரை அதிகரிக்கப்படும்
சகல அரச ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் 57 ஆயிரத்து 500 ரூபா வரை அதிகரிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரக்காபொல நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தொகுதி அமைப்பாளர்களும் இதன்போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.