Home » அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வலியுறுத்தல்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வலியுறுத்தல்.

Source

பொதுத் தேர்தலுக்கான புதிய ஜனநாயக முன்னணியின் பிரச்சார கூட்டம் நீர்கொழும்பில் இன்று இடம்பெறுகிறது.

இந்த பிரச்சார கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் தலைமையின் கீழ் இடம்பெறும் முதலாவது கூட்டமாகும்.

கம்பஹா மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இச்சந்தரப்பத்தில் திரு.விக்ரமசிங்க நினைவு கூர்ந்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் அவசியம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். பாராளுமன்றத்தின் அனுபவம் வாய்ந்த சிறந்த அரசியல்வாதிகளின் தேவை உணரப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் அனைத்து விடயங்களையும் விளக்கிக் கூறுவது அவசியம் என்றும் திரு.விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment