இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்; அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பனிஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமோக வரவேற்பளித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய பிரதமர் இந்தியாவிற்குச் சென்றுள்ளார். தனது சொந்த இடமான குஜராத் மாறிலத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமரை இந்திய பிரதமர் அழைத்துச் சென்றுள்ளார். அகமதாபாத் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியினையும் இருவரும் பார்த்து ரசித்தனர்.