சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு அல்லது நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (ஆன்லைன் சட்டமூலம்) குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
தவறான செயல்முறை, உள்நோக்கம் மற்றும் பேச்சு சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தி, நிகழ்நிலைக் காப்புச்சட்ட குறித்து அவர் தீவிர கவலைகளை வெளிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பரந்த வரையறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் தாக்குதல்கள் போன்ற செயல்களை எதிர்த்துப் போராடும் நோக்கத்தில் உள்ளன, ஆனால் முறையான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.
சட்டத்தை திருத்துவதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கும் வேளையில், சட்டத்தின் சாத்தியமான தாக்கம் குறித்த இணைய உரையாடல் உண்மையான தீர்வுகளைக் காணுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.