இங்கிலாந்தில் அம்ப்யூலன்ஸ் வண்டி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் அம்ப்யூலன்ஸ் வண்டி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. புஆடீ , யூனிசன் மற்றும் யுனைட் ஆகிய மூன்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். அந்நாட்டு தேசிய சுகாதார சேவை ஊழியர்களும் அடுத்த மாதம் 6ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்போது, தாதியர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.