இத்தாலியை சேர்ந்த தம்பதிக்கு வெளிநாடு செல்வதற்கு தடை
இத்தாலியை சேர்ந்த தம்பதிகள் வாடகைத் தாய்மூலம் குழந்தை பெறுவதற்காக வெளிநாடு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறும் எவருக்கும் இரண்டாண்டு கால சிறைத்தண்டனையுடன், பத்து இலட்சம் யூரோ வரையிலான அபராதமும் செலுத்த நேரிடலாம்.
இத்தாலியின் தீவிர வலது சாரி அரசாங்கம் முன்மொழிந்த யோசனையின் அடிப்படையில் புதிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இது வேறு நாடுகளுக்கு சென்று வாடகைத் தாய் மூலம் பிள்ளை பெற விரும்பும், மாற்றுப் பாலித்தனவர்களை இலக்கு வைப்பதாகும் என விமர்சகர்கள் கூறுகிறாhகள்