இத்தாலி மற்றும் சுவிற்சர்லாந்தின் எல்லையில் மாற்றம்
பனிப்பாறைகள் உருகிவருவதால் இத்தாலி மற்றும் சுவிற்சர்லாந்தின் எல்லை பகுதி மாற்றம் அடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருகிவருகின்றன.
இத்தாலியும் சுவிற்சர்லாந்தும் அருகில் உள்ள நாடுகளாகும். இருநாடுகளினதும் எல்லையாக அல்ப்ஸ் மலைப் பகுதி அமைந்துள்ளது.
அல்ப்ஸ் மலைத்தொடரின் பனிப்பாறைகள் நாளுக்குநாள் உருகி வருவதனால் இருநாடுகளினதும் எல்லை மாற்றம் அடைந்துள்ளது.