Home » இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

Source

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

தனது விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்திற்கான ஆரம்பகட்ட முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

இதன்போது, இலங்கையில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள இந்திய நிதியுதவித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி, அரசியல் ஆலோசகர் கலாநிதி ராம்பாபு மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் காமகே உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image