இலங்கை ரூபாயில் முதல் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாக இந்திய பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை வர்த்தகப் பொறிமுறையில் மாற்றம் கொண்டு வர இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில், இலங்கை ரூபாயில் ஏற்றுமதிக்கான பணத்தைச் செலுத்தி, இலங்கையுடனான தனது முதல் டொலர் அல்லாத பரிவர்த்தனையை முடித்துள்ளது.
டொலர் பற்றாக்குறையால் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு இவ்வாண்டு ஜனவரி இறுதியில் $2.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
N.S