இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
அனுர குமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு ராஜதந்திரி இவராவார். ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இருதரப்புப் பேச்சவார்த்தை நடைபெறவுள்ளது.
அத்துடன் பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பிலான செயற்றிட்டங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புப் பற்றியும் இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது கவனம் செலுத்தப்படும்.