இன்றும் – நாளையும் நாட்டின் பல பாகங்களில் அடைமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரல்.
இன்றும் நாளையும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லி மீற்றரைத் தாண்டிய மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஞ்ஞானி பபோதினி கருணாபால எமது நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஆங்காங்கே மழை பெய்யலாம். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், அம்பாந்தோட்டையில் இருந்து புத்தளம் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். இந்தக் கடற்பரப்பு கொந்தளிப்பானதாக மாறக்கூடுமென காலநிலை விஞ்ஞானி பபோதினி கருணாபால மேலும் குறிப்பிட்டார்.
மழை வீழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்களை எமது செய்திகளின் கடைசி அம்சமாக ஒலிபரப்பாகும் வானிலை அறிக்கையில் அறிய முடியும்.