இலங்கையர்கள் 5 ஆயிரத்து 500 பேருக்கு தென் கொரியாவில் வேலைவாய்ப்பு
இலங்கையர்கள் 5 ஆயிரத்து 500 பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 55 பேர் இன்று தென்கோரியாவிற்கு பயணமாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு இந்த தொழில்வாய்ப்புக் கிடைத்துள்ளது.
2002ஆம் ஆண்டில் அதிகளவான இலங்கையர்கள் தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பிற்குச் சென்றதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.