Home » இலங்கையின் அபிவிருத்திக்கு மேலதிக உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானம்.

இலங்கையின் அபிவிருத்திக்கு மேலதிக உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானம்.

Source

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென மேலதிகமாக உதவிகளை வழங்கத் திட்;டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருக்கின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 24 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக அபிவிருத்தி உதவியாக வழங்கப்படவிருக்கின்றது.

யு.எஸ்.ஏ.நிறுவனத்தின் ஆசிய பணியகத்திற்கான உதவி நிர்வாக அதிகாரி மிச்செல் ஷிபர், திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிரிவர்த்தன ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.

நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, யு.எஸ்.ஏ.நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் கெப்ரியல் க்ராவ் ஆகியோரும் இதில் கலந்துகொண்டார்கள்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image