Home » இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

Source

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக உள்ளது. ஆசியர்களில் 16.1 சதவீதம் பேர் மட்டுமே இந்த மனநலக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். 
 
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் நடத்தப்பட்ட ஆய்வில், 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் இலங்கையர்களில் 39 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.  19 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மனநல சேவைகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. ஏனெனில் இந்த வயதினரில் கணிசமான பகுதியினர் 7.0 சதவீதம் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகவும், மற்றும் பலர் 35சதவீதம் ஒருவருக்கொருவர் வன்முறையை அனுபவிப்பதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 200,000 பேர் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர். இவ்வாறு புலம்பெயரும் பெண்களில் 75 சதவீதம் பேர் திருமணமானவர்கள், இவ்வாறு புலம்பெயரும் பெண்களின் பிள்ளைகளுக்கே மன அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

The post இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image