இலங்கை – பங்களாதேஷ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஏற்பாடு
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கு இடையிலான இரு தரப்பு உறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை எயா வைஸ்மாஷல் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் முனிருஸ்மானை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு சிறிஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு படை தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.