இளைஞர் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தயார் – நாமல் ராஜபக்ஷ
இளைஞர் சமூகம் விரும்பும் நவீன தலைமுறையின் அரசியல் சக்தி தேவை எனவும்; அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து நாட்டை வென்றெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனது கட்சியில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.