இஸ்ரேலில் 48 மணிநேர அவசரகால நிலைமை பிரகடனம்
இஸ்ரேலில் நாடளாவிய ரீதியில் 48 மணிநேர அவரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகள் தம்மால் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலன்ற் (Yoav Gallant) அவசர கால நிலைமையினை பிரகடப்படுத்தியுள்ளதுடன் பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக விரிவான தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களைக் கண்டறிந்த ஹமாஸ் அமைப்பு, முன்கூட்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.