இஸ்ரேல் மீது தாக்குதல்: ஈரானின் ஆன்மீகத் தலைவர் உத்தரவு
இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் நடத்துமாறு ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி தமது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிய் கொல்லப்பட்டதையடுத்து ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுண்சில் கூடியபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
போர் விரிவடையும் பட்சத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்குமான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஈரானின் புரட்சிகர படைக்கு அறிவிப்பு விடுத்துள்ளார்.
இஸ்மயில் ஹனியை கொலை செய்தமைக்கு கடுமையான தண்டனையைப் பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளதாகவும் ஆயத்துல்லா அலி கொமேனி குறிப்பிட்டுள்ளார்.