உக்ரேனை முழுமையாக ஆக்கிரமிக்கப்போவதாக ரஷ்யா எச்சரிக்கை.
ரஷ்ய – உக்ரேன் எல்லையில் இருந்து ரஷ்யாவை நோக்கி 30 கிலோ மீட்டர் உக்ரேன் இராணுவம் நகர்ந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
யுக்ரேன் இராணுவம் கார்ஸ் பகுதியில் முன்னேறியுள்ளன.
ரஸ்யாவின் இரண்டு கிராமங்கள் உக்ரேனிய படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு போக்குவரத்தின் முக்கிய மையங்களும் இந்த பகுதியில் அமைந்துள்ளன.
யுக்ரேன் நவீன ஆயுதங்களை மேற்குலக நாடுகளிடம் இருந்து பெற்றுள்ளதால் இந்த முன்னோக்கிய நகர்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், முரசண பகுதியில் உள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் ரஷ்யா புதிய பாதுகாப்பு எல்லைகளை உருவாக்கி வருகின்றது.
இந்த நிலையில், யுக்ரேனின் இந்த செயற்பாட்டிற்கு பதிலடியாக ரஷ்யா, முழு உக்ரேனையும் ஆக்கிரமிக்கப்போவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.