உலக தபால் தினத்தை முன்னிட்டு கொழும்பில் முத்திரை கண்காட்சி
குடிசன மதீப்பீட்டிற்காக வருகை தரும் அதிகாரிகளின் ஆள் அடையாளத்தை அறிவது பற்றி குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் விளக்கம்
சனத்தொகை மதிப்பீட்டிற்காக வரும் ஆட்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்வது பற்றி குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
ஆள் அடையாளத்தை காண்பதில் பிரச்சினை இருக்குமாயின் துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள வேண்டும். அந்த இலக்கம் 1901 என்பதாகும்.
குடிசன மதிப்பீட்டிற்காக வீடுகளுக்குச் செல்லும் சகல உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சனத்தொகை மற்றும் குடியிருப்பு மனை கணக்கெடுப்;பின்; கீழ் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முறையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இம்முறை நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. சகல நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்வதற்காக டிசெம்பர் 19ஆம் திகதி குடிசன மதிப்பீட்டுத் தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதென திருமதி செனவிரத்ன குறிப்பிட்டார்.