எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: எட்டு கட்சிகள் ஒரு சுயேட்சை குழு தகுதி
காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் தகுதி பெற்றுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் று.யு விக்ரமசிறி தெரிவித்துள்ளார்.
ஜனசெத்த பெரமுன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பொதுஜன ஐக்கிய சுதந்திர கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி, இரண்டாம் தலைமுறை கட்சி ஆகியவற்றுடன் சுயேட்சை குழுவொன்றும் தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இந்தத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியும் சுயேட்சை குழுவொன்றும் தாக்கல் செய்த வேட்டுமனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் தேசிய மக்கள் சக்தி கட்சி, இரண்டாவது தலைமுறை கட்சி ஆகியவை சமர்ப்பித்த வேட்புமனுக்களில் தலா நான்கு பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டன.
எல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்காக வேட்டுமனுக்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிடைந்திருந்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்களிப்பு அடுத்த மாதம் 26ஆம் திகதி இடம்பெறும். 48 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். இவர்கள் 28 பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளனர் என்று தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டார்.