சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வு முடிந்ததைத் தொடர்ந்து, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வரவு செலவுத் திட்ட ஆதரவு திட்டங்களின் ஊடாகவும் நிதியைப் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது என அவர் கூறினார்.
அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிமொழிகளைப் பெறுவதில் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.