ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் மஹா நாயக்க தேரர்களிடம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹா நாயக்க தேரர்களிடம் இன்று வழங்கப்பட்டது.
கண்டியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றனர். இந்த தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் நான்காம் திகதி வெளியிடப்படும்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம், தேர்தலை இலக்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டது அல்லது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம் உட்பட பல துறைகளே அபிவிருத்தி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
மக்கள் மயப்படுத்தப்பட்ட சந்தை வாய்ப்பு பொருளாதாரத்தை ஏற்படுத்துவது ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும்.
உற்பத்திகளை ஏற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பு தனியார் பிரிவுகளுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவி;த்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டீ சில்வாவும் பங்கேற்றார். நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான சிறந்த முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடைமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்று கலாநிதி ஹர்ச டீ சில்வா இதன்போது தெரிவித்தார்.