ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மோசடியாளர்களுக்கு இடமில்லை – சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மோசடியாளர்களுக்கு இடமில்லை எனவும் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ சிப்பாய்கள் அமைப்பின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈ – விசா சேவை தொடர்பாக அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்த மோசடியை ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்து அதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளது. உச்ச நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கருத்தை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.