ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரான்ஸ் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரசின் வாழ்த்துக்களையும் அவர் ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் அரசியல் வேலைத்திட்டத்தின் தார்மீக விடயங்களுக்கு மார்க் அன்ரூ பிரான்ஸ் பாராட்டுத் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைத் திட்டங்களையும் அவர் வரவேற்றார்.