ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பிரதமர் சந்திப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
நாட்டின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ்க்கும் (Paul Wesley Stephens), பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதன்போது, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோவுக்கும் (Carmen Moreno), பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான வலுவான, நீண்டகால உறவுகள் குறித்து அதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.
நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவிய ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
லஞ்சத்தை ஒழித்து, முதலீட்டு சபை போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் அதன்போது குறிப்பிட்டார்.