கடந்த ஆறு மாதங்களில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பதிவு
நாட்டில் வருடாந்தம் பதிவு செய்யப்படும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்திருக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இந்த சாதகமான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை 12 ஆயிரத்து 651 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.