கடந்த காலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டல்
அரச ஊடகம் கடந்த காலங்களில் பொதுமக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விடயங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இது சிறந்த போக்கல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக இருப்பதாக சுதந்திர ஊடகத்தை அடிப்படையாகக்கொண்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பதேயாகும்.
பிரதேச ஊடகவியலாளர்களின் அறிவை மேம்படுத்துவது, ஊடக கலாசாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்.
காலாவதியான சட்டங்கள் காணப்படுவதால் சுதந்திர ஊடகச் செயற்பாட்டிற்கு அது தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை புதுப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உண்மை மற்றும் தெளிவான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.