கடவத்தையில் இருந்து மீரிகம வரையான பகுதியின் பணிகளை விரைவில் ஆரம்பம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தையில் இருந்து மீரிகம வரையிலான பகுதியின் எஞ்சிய பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதற்கு தேவையான 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவிற்கான அனுமதி, ஒன்றிணைந்த நிதியத்தில் இருந்து கிடைத்தவுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.