கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை.
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை காரணமாகஇ அரபிக்கடலில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.
இதனால், குறித்த கடல் பிரதேசம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவ மற்றும் கடல்சார் சமூகம் மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோர் உடனடியாக கரைக்கோ அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எச்சரிக்கை அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை காலை வரை அமுலில் இருக்கும்.