கனடாவின் சனத்தொகை கடந்த வருடம் பத்து லட்சத்தால் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன. கனடாவின் வரலாற்றில் 1957ஆம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்பட்ட கூடுதலான வருடாந்த சனத்தொகை அதிகரிப்பு இதுவாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகளவிலான குடியேற்றவாசிகளுக்கு கனடாவில் பிரஜாவுரிமை வழங்கப்பட்டமை இதற்கான பிரதான காரணமாகும். ஊழியர் பற்றாக்குறையை சீர்செய்யும் நோக்கோடு, கனேடிய அரசாங்கம் அதிகளவிலான வெளிநாட்டவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்கிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்றூடு தலைமையிலான கனேடிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டளவில் ஐந்து லட்சம் குடியேற்றவாசிகளை வரவேற்கத் தயாராக உள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.