முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.
2023-03-09 அன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகளிற்கான வேடபுமனுத் தாக்கலின்போது முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிராகவே தமிழ் அரசுக் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றில் றிட் மனு கோரும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கரைத்துரைப்பற்றில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை நிராகரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை இரத்து செய்து வேட்பு மனுவை ஏற்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக்கோரி தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் மருந்துவர் ப.சத்தியலிங்கம், மருத்துவர் சிவமோகன் மற்றும் ஜெயசீலன் ஜெயஈசன் ஆகியோர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் சட்டத்தரணிகளான டிவ்வியா நஸ்கம, கேசவன் சயந்தன், டிலான் கொரயா ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் ஆயராகினர்.
இந்த வழக்கு இன்று மன்றில் நீதியரசர்களான பிரியந்த ஜெயவர்த்தன, குமுதினி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர் மனுதார்கள் சார்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவும், தெரிவத்தாட்சி அலுவலரது அறிக்கைகள் நாளை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டதோடு வழக்கு 9திகதி இடம்பெறும் எனத் திகதியிடப்பட்டது.
TL