Home » கல்வியை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

கல்வியை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

Source

சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பரந்த பங்களிப்பைப் பெறுவது தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். இலங்கை பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம் ‘ வழங்கும் நிகழ்வுஇ கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சாரணர் இயக்கம்இ கெடெட் படை இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் ஊடாகவும் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு பெருமளவில் பங்களிப்பு செய்ய முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போது கல்விக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வருடங்களில் அதற்கு அதிக நிதி செலவிட நேரிடும். சுகாதாரத் துறைக்கும் தேவையான நிதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கல்வித்துறையை புத்தகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. பிள்ளைகள் முன்னேற புதிய வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அதற்கான பணத்தை செலவிடுவோம். சாரணர் இயக்கத்தை அனைத்து பிரிவுகளிலும் முன்னேற்ற எதிர்பார்க்கிறோம். 75,000 உறுப்பினர்களாக உள்ள அங்கத்தவர் தொகை எதிர்காலத்தில் 150இ000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image