காசாவைப் போன்ற நிலை லெபனானிலும் உருவாகும்.
ஹிஸ்புல்லா அமைப்பை வெறுத்து ஒதுக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெத்தன்யாஹ_ லெபனான் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாவிட்டால் காசாவில் ஏற்பட்டுள்ள அழிவுகளை லெபனானிலும் காண நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரைவழி மூலம் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் வலுப்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் நெத்தன்யாஹ_வின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
ஹிஸ்புல்லா அமைப்பை நிராகரிப்பதன் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் நெத்தன்யாஹ_ அறிவித்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாக மேற்கொண்டுவரும் தாக்குதல்களினால் ஆயிரத்து 400 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டிருக்கின்றது.