Home » கால்டன் ஸ்வீட் ஹவுஸ் நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் விருது

கால்டன் ஸ்வீட் ஹவுஸ் நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் விருது

Source

கால்டன் ஸ்வீட் ஹவுஸ் தனியார் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்பான தேசிய உயர் கைத்தொழில் விருது விழாவில் உணவு, பாணங்கள் பிரிவில் (மத்திய அளவிலான) ஆண்டின் சிறந்த தேசிய கைத்தொழில் வர்த்தக நாமத்துக்கான விருதை வென்றுள்ளது. கால்டன் குழுமம் சார்பாக அதன் நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் தேசமான்ய மஹேஷ் டீ சில்வா மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கால்டன் ஸ்வீட் ஹவுஸ் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் குறிப்பாக நீர்கொழும்பு பகுதியில் உணவு, பாண சேவை வழங்குநராக பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. கால்டன் ஹயிப்பர், கால்டன் டிஸ்டிரிபியுட்டர்ஸ் காந்தி டிஸ்டிரிபியுட்டர்ஸ், கால்டன் கேட்டரிங், C7 by calton மேற்படி குழுமத்துக்கு சொந்தமான இதர நிறுவனங்களாகும். உயர் தரத்திலான உணவு பாண வகைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதன் மூலம் நுகர்வோருக்கு தரமானதொரு சேவையினை வழங்கும் மேற்படி நிறுவனம் யுனிலிவர், பிரமீட், வில்மா, அப்லிப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

கால்டன் ஸ்வீட் ஹவுஸ் நிறுவனம் கேக், பேக் செய்யப்பட்ட உணவுகள், சிற்றுண்டிகள், பகுதியளவில் தயாரிக்கப்பட்ட பழங்களிலான உற்பத்திகள், சமைத்த தானியங்கள், குளிரூட்டப்பட்ட பேக்கரி உணவுகள் உள்ளிட்ட பரந்தளவிலான உணவு வகைகளை தயாரித்து விநியோகிப்பதில் சிறப்பு தகைமை பெற்றுள்ளது. நீர்கொழும்பு, கட்டுநாயக்க, கட்டுனேரிய, திவுலபிடிய, ஜாஎல, கொச்சிகடை, வன் கோல்பேஸ் வணிகத் தொகுதி, கட்டுநாயக்க விமான நிலையம், உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் 20 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ள மேற்படி நிறுவனம் ISO 22000, HACCP, GMP, ISO 9001, ISO 14001 போன்ற தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நியமங்களுக்கமைய உணவு, பாணங்களை உற்பத்தி செய்வதோடு உணவுகளின் சுவை, மற்றும் போசாக்கின் தரத்தை பாதுகாக்கும் வகையில் பொதியிடுவதிலும் விநியோகிப்பதிலும் தனிக் கவனம் செலுத்துகிறது. 04 ஊழியர்களுடன் 1983 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கால்டன் குழுமம் தற்பொழுது சுமார் 300 ஊழியர்களை கொண்ட நம்பிக்கையை வென்ற வர்த்தகநாமமாக திகழ்கிறது. நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்காக கொண்டு செயற்படும் இந் நிறுவனம் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் வழங்கும் உயர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image