காஸாவில் போலியோ மருந்து வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்.
மத்திய காஸா எல்லைப் பகுதியில் உள்ள நுசெயிராட் பிரதேசத்தில் இஸ்ரேல் இன்று மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெனின் நகரை இஸ்ரேல் படைகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், பாலஸ்தீன மக்கள் உணவு, மின்சாரம், நீர், இணையதள வசதிகளை இழந்துள்ளனர். மேற்குக் கரைப் பகுதியில் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
காஸா எல்லைப் பகுதியில் போலியோ மருந்து வழங்கும் நிகழ்வு நாளை ஆரம்பமாகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸா எல்லைப் பகுதிக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நிவாரணக் குழுக்கள் கவலை தெரிவிக்கின்றன.
காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 40 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இந்த போரினால் இதுவரை 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.