குடிசன மதிப்பீட்டு நடவடிக்கையின் இறுதிக் கட்டம் இன்று.
நாட்டின் 15 ஆவது குடிசன மதிப்பீட்டிற்காக தனி நபர் மற்றும் வீடுகளின் தகவல்களை கணக்கெடுக்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக அதிகாரிகள் நாடு முழுவதும் வீடுகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரிக்கப்பார்கள் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 50 ஆயிரம் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர். இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருதடவை இந்த குடிசன மதிப்பீடு இடம்பெறுகின்றபொழுதிலும் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அது தாமதமானது.
இறுதியாக 2012ஆம் ஆண்டே நாட்டில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.