கெஹலியவின் மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி தனது தந்தைக்கு சட்டத்தின் நியாயம் கிடைக்காததால், இந்த மனித உரிமை மீறல் குறித்து முறைப்பாடு அளித்ததாக அவர் கூறினார்.
அத்துடன் விசாரணையின் பின்னர் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தனது தந்தை கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது தன்னிச்சையான கைது என்றும் தனது தந்தைக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.