சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவற்றைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தி இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்துமாறு கோரி நவம்பர் 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஐசிசிக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த மூன்று கடிதங்களையும் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“மூன்று கடிதங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை பரிசீலிக்கிறேன்” என்று ஜனாதிபதி சஜித் பிரேமதாசவிடம் கூறினார்.