சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமாகும் – மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன் நிறைவேற்று மட்டத்திலான கலந்துரையாடலை ஆரம்பிக்க இந்த நிலைமை அவசியமாகும். அதனால் இது, இந்தச் சந்தர்ப்பத்தை பரீட்சிக்கும் கட்டமல்ல. ஒரு தனி நபரால், அரசியல் கட்சியால், குழுவால் இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள முடியாது. அனுபவம் குறைந்த அரசியல்வாதி ஒருவர் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் நிலவும் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியாமல் போகும். மக்களின் பிரச்சினையை குறைப்பதற்கு உடனடி நிவாரண வேலைத் திட்டமும் அவசியமாகும். அத்தியாவசிய பொருட்களையும் மருந்து பொருட்களையும் முறையான வேலைத் திட்டத்திற்கு அமைய தொடர்ந்தும் நாட்டிற்கு பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிதி மூலம் நாட்டிற்கு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். எரிபொருளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரக்கறி உள்ளிட்ட ஏனைய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு எரிபொருள் தேவைப்படுகின்றது இதன்போது அனைவருக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய முறையும் தற்போது வகுக்கப்பட்டுள்ளது.
