சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக நிதித்துறை ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில்; பங்கேற்றனர்.
